search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை முயற்சி"

    • ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்வது அதன் வாயிலாக தெரியவந்துள்ளது.
    • ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    கோவை,

    கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் 9,241 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், இதில் 916 பேர் உயிரிழந்து விட்டனர். இவர்களில் விஷம் குடித்தவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இறப்புகளுக்கான காரணத்தில், தற்கொலை 13-வது இடத்தில் உள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை யால் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார நிறுவ னம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அதாவது ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்வது அதன் வாயிலாக தெரியவந்ததுள்ளது.குறிப்பாக 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவ ர்கேள அதிகம் தற்கொலை செய்து கொள்வதும் தெரியவந்து ள்ளது.

    மன அழுத்தம், குற்றவு ணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதி சிக்கல்கள் உள்ளிட்டவை தற்கொ லைக்கு காரணங்களாக உள்ளன.

    கோவை அரசு ஆஸ்பத்தி ரியில் கடந்த ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரை 5,113 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் 553 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கி ன்றன.இதில் 31 பேர் தூக்குப்போட்டும், 359 பேர் விஷம் குடித்து, தீக்காயத்தால் 106 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

    நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 4,128 பேர் சிகிச்சை பெற்ற நிலையில், 353 பேர் உயிரிழந்தனர்.

    இவர்களில் 7 பேர் தூக்கிட்டும், 248 பேர் விஷம் குடித்தும், 61 பேர் தீக்காயத்தாலும் இறந்துள்ளனர். புள்ளி விபரங்களின் படி விஷம் குடித்தே அதிகமனோர் இறந்துள்ளது தெரியவருகிறது.

    இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

    தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனைக்கு ஏராளமானோர் வருகிறார்கள். அவர்களுக்கு மனநலத்துறையினர் கவுன்சிலிங் வழங்குகின்றனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகை யில், உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளன.

    விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதற்கு அவர்கள் எந்த வகையான விஷம் அருந்தினார்கள் என்பது அவர்களது உறவினர்களுக்கே தெரிவதில்லை.இதுதவிர பலர் விஷத்தை மதுவுடன் கலந்து அருந்து வதும் ஒரு காரணமாக உள்ளது.

    விஷம் குடித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தாலும், அது எத்தகைய விஷம் என்பது தெரியாததால், உரிய சிகிச்சை அளிக்க முடிவதில்லை.

    அனைத்து பரிசோதனை களையும் மேற்கொண்டு விஷத்தின் தன்மை கண்ட றிந்து, சிகிச்சை அளிக்கும் முன் உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது.

    இதுகுறித்த விழிப்புணர்வு இருந்தால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம். இதை கருத்தில் கொண்டே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கணவன்-மனைவி இடையே தகராறு எதிரொலி
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். கட்டிட தொழிலாளி.

    இவரது மனைவி தமிழ ரசி(வயது26). இவர்களுக்கு டெசிகா(4), பூமிகா(2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சந்ேதாஷ் தினசரி மது குடித்து விட்டு தான் வீட்டி ற்கு வருவார். அவர் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து கொண்டு இருந்தார்.

    இதனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் மனைவியிடம் அப்படிதான் குடிப்பேன் என கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தமிழரசி 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி சாணிப்பவுரை கரைத்து முதலில் தனது 2 குழ ந்தைகளுக்கும் கொடுத்தார். பின்னர் அவரும் குடித்தார். சிறிது நேரத்தில் 3 பேரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

    இரவு வீட்டிற்கு வந்த சந்தோஷ் குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு 3 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    • ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் ஈரோடு போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
    • ஊழியரை அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெருந்துறை:

    பெருந்துறை சுள்ளி பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). இவர் கடந்த 20 வருடங்களாக பெருந்துறை அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நடராஜன் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் மண்டல மேலாளரை சந்திக்க சென்றார். அப்போது பணி சம்பந்தமாக வணிக மேலாளர் நடராஜனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த அவர் பெருந்துறை போக்குவரத்து கழக கிளை அலுவலகம் வந்தார். இதையடுத்து அவர் அங்கு சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதைப் பற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை கிளை அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் சுமார் 80 பேர் நள்ளிரவில் பணிமனை நுழைவு வாயில் பகுதியில் திரண்டர். இதை தொடர்ந்து அவர்கள் சக ஊழியரை அவமானப்படுத்தி அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனின் மருத்துவ செலவை அவரே ஏற்க வேண்டும். இல்லை என்றால் இன்று அதிகாலை முதல் பெருந்துறை கிளை பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று கூறி அந்த பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் ஈரோடு போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் ஊழியரை அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சை பெற்று வரும் டிரைவரின் மருத்துவச் செலவினை போக்குவரத்து கழகமே கவனித்து கொள்ளும் என்றும் கூறினர். இதை யடுத்து அவர்களுக்கிடையே சமரசம் ஏற்பட்டு போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

    • தினமும் மது குடித்து விட்டு வந்தது தனலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.
    • 4 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக வந்த தனலட்சுமியை மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றார்.

    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் காம்பிளியாம்பட்டி அருகே உள்ள சின்னகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 29). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு வேணிஸ்ரீ (10), சுபஸ்ரீ (8), மதுமிதா (6), யோக ஸ்ரீ (4) ஆகிய 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் 4 பெண் குழந்தைகள் உள்ளதால் செல்வம் அவரது 4 வயது மகள் யோகஸ்ரீயை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதனை அறிந்த தனலட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்தார்.

    பின்னர் அவர் தனது கணவர், குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வத்தை அழைத்து அவரை கண்டித்து அனுப்பினர்.

    போலீசில் புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்த அவர் தினமும் மது குடித்து விட்டு வந்தது தனலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டடார்.

    கணவரின் கொடுமையால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனலட்சுமி குழந்தைகளுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி அவர் சம்பவத்தன்று அவரது 4 பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு தற்கொலை செய்வதற்காக வந்தார். அங்கு அவர் குழந்தைகளுடன் அழுது கொண்டு இருந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற பருத்தியூரை சேர்ந்த சின்னாள் (65) என்பவர் பார்த்தார். பின்னர் அவர் தனலட்சுமியின் அருகே சென்று என்ன பிரச்சினை என கேட்டார். அதற்கு அவர் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய வந்து இருப்பதாக கூறினார். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து தனது ஆலய பாதிரியாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் அந்த பகுதியில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும் நிர்வாகிக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக வந்த தனலட்சுமியை மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் இல்ல நிர்வாகி இது குறித்து ஆழியாறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் ஊராட்சியில் உள்ள பங்களா கார்டு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்.
    • கணவன் -மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் ஊராட்சியில் உள்ள பங்களா கார்டு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு திருமணமாகி கவுசல்யா என்ற மனைவியும், 10 வயதில் ஸ்ரீ ரமேஷ், 7 வயதில் தீபக்குமார் ஆகிய மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    மாணிக்கம் கல் உடைக்கும் தொழில் செய்து வருகின்றார். மனைவி கவுசல்யா ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.

    குடும்ப தகராறு

    இந்த நிலையில் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு கவுசல்யா அருகில் உள்ள ஜோசியர் என்பவருடைய தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள விவசாய கிணற்றில் கவுசல்யா தனது 2 மகன்களையும் திடீரென \தள்ளி விட்டு தானும் கிணற்றில் குதித்தார். இதில் இளைய மகன் தீபக்குமார் கிணற்றிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கிணற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    சிகிச்சைக்காக கவுசல்யாவை ஓமலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ரமேஷ் சிறிய காயங்களுடன் நலமாக உள்ளார்.

    உருக்கமான தகவல்

    இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதி இடையே குடும்ப தகராறு ஏன் ஏற்பட்டது? என விசாரணை நடத்தியதில் போலீசாருக்கு உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.

    கவுசல்யாவின் கணவர் மாணிக்கத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கல் உடைக்கும் தொழில் செய்து வருவதில் கிடைக்கும் சம்பளத்தை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது குடித்து வந்தார். மேலும் ஒழுங்காக வேலைக்கு செல்வது கிடையாது. இதனால் கவுசல்யா தனது கணவரிடம் நமக்கு 2 குழந்தைகள் உள்ளன. அவர்களை நன்றாக படிக்க வைக்க பணம் தேவைப்படும். நமது குடும்பம் வறுமையில் உள்ளது. எனவே மது பழக்கத்தை கைவிடுங்கள். தினமும் வேலைக்கு செல்லுங்கள் என அறிவுரை கூறியுள்ளார். ஆனால் மாணிக்கம் கேட்கவில்லை. தொடர்ந்து மது குடித்து வந்தார். பலமுறை சொல்லியும் கணவர் கேட்கவில்லையே என கவுசல்யா மனவேதனையில் இருந்தார்.

    சண்டை

    வழக்கம் போல் நேற்று காலையிலேயே மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் மாணிக்கம் வீட்டில் இருந்தார். இதனால் கவுசல்யா அவரிடம் வேலைக்கு போகாமல் இப்படி குடித்து விட்டு வீட்டில் இருக்கிறீர்களே, வேலைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். அப்போது மாணிக்கம் தனது மனைவிைய சத்தம் ேபாட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கவுசல்யா தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    சோகம்

    இந்த சம்பவம் ஓமலூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த பெண் அதிகாரி கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்தபோது தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ராயபுரம்:

    ராயபுரம், கல்லறை சாலை அருகே குடிநீர் வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு திருமணமான 33 வயது இளம்பெண் அதிகாரியாக உள்ளார்.

    இவர் கருத்து வேறுபாட்டால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    அதே அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் ஜமீன்பல்லாவரத்தை சேர்ந்தவர் பாலியல் ரீதியாக பெண் அதிகாரிக்கு தொல்லை கொடுத்தார். இதுபற்றி கண்டித்தும் அதிகாரியின் தொல்லை எல்லை மீறியது.

    இதனால் மனவேதனை அடைந்த பெண் அதிகாரி கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்தபோது தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நலமாக உள்ளது.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த, பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியின் மனைவி, தற்கொலைக்கு முயன்ற பெண் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு அவருக்கும், அவரது மகள் மற்றும் தாய்க்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அதிகாரி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அதிகாரியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

    குடிநீர் வாரிய அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் தனக்கு கீழ் பணிசெய்யும் பெண் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுவனின் தந்தை ஏற்க னவே இறந்து விட்டார். இந்நிலையில் அந்த சிறுவனை அவரது தாயார் அடிக்கடி ஒழுங்காக படிக்கும்படி கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு நேற்று நள்ளிரவு சிறுவன் ஒருவன் கடலுக்குள் இறங்க முயற்சித்துள்ளான். இதை பார்த்த அங்கு இருந்த நரிக்குறவர்கள் பார்த்து அந்த சிறுவனைபிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமை யிலான போலீசார் அங்கு சென்று அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

    அவன் பண்ருட்டி அருகே உள்ள பண்டரக்கோ ட்டையை சேர்ந்த 11 வயது சிறுவன் என்பதும் 6-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த சிறுவன் அவரது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சென்று தனது தாயார் பணம் வாங்கி வர சொன்னதாக கூறி, பணத்தை வாங்கிக் கொண்டு பண்ருட்டி யில் இருந்து கடலூர் பஸ் நிலையம் வந்துள்ளான். பின்னர் அங்குள்ள கடை யில் எலி மருந்து கேட்டுள்ளான். அந்த கடையில் இல்லை என்று சொன்ன தால், மீண்டும் பஸ் ஏறி தேவனாம்பட்டி னம் சில்வர் கடற்கரைக்கு சென்றபோது அங்குள்ள வர்கள் பிடித்து போலீசி டம் ஒப்படைத்தது தெரிய வந்தது.

    மேலும் மாணவனின் தாயாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர். அந்த மாணவன் தாயாரை பார்த்ததும் அவரிடம் செல்லாமல் அழுதுள்ளான். பின்னர் குழந்தைகள் பாது காப்பு அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு, சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுவன் தனது தாயாருடன் செல்வ தாக கூறியுள்ளான். இதன் பின்னர் சிறுவனின் தாயா ருக்கும் அறிவுரை கூறி அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது0

    • கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக விரக்தி
    • 70 அடிஆழ கிணற்றில் குதித்ததால் வலது கை துண்டானது

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி அடுத்த அரசன் காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது27).

    இவரது மனைவி பவதாரிணி(25). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்த படி வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் 2 பேரும் 6 மாதமாக காதலித்து கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் அரசன் காட்டில் உள்ள கார்த்திகேயனின் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் திருமணமான சில நாட்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது சண்டையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று, கார்த்திகேயன் தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் ரூ.5 ஆயிரம் இருப்பதாக கூறி அதனை கொடுத்துள்ளார். ஆனால் கார்த்திகேயன் மேலும் பணம் வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ள்ளது.

    இதனால் கோபம் அடைந்த பவதாரிணி, வீட்டை விட்டு வெளியில் வந்து, அங்கிருந்த 70 அடி கிணற்றில் குதித்து விட்டார். இதில் அவரது வலது கை துண்டானது.

    இதனை பார்த்த கார்த்திகேயன் உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து, கிணற்றில் குதித்த பவதாரிணியை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதிரியார் ஜெகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
    • தலைமறைவான ஜெகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெகன்(வயது 39). இவர் பாதிரியாராக இருந்து வருகிறார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் சொந்தமாக கிறிஸ்தவ சபை கட்டி போதகம் செய்து வருகிறார்.

    இவரது சபைக்கு சில ஆண்டுகளாக 40 வயது பெண் ஒருவர் வந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை தொடர்பு கொள்வதற்காக அவரிடம் செல்போன் எண்ணை ஜெகன் வாங்கி உள்ளார்.

    எப்போதாவது போன் செய்து வந்த ஜெகன், காலப்போக்கில் அந்த பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு கணவர் இல்லை. ஒரு மகன் மட்டுமே உள்ளார் என்பதை அறிந்த மதபோதகர் அந்த பெண்ணி டம் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அந்த பெண் நேற்று மாலையில் வீட்டில் இருந்த 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, பாதிரியார் ஜெகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    அவரை கைது செய்வதற்காக அவர் தங்கியிருக்கும் தச்சநல்லூர் மங்களா குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து தலைமறைவான ஜெகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வல்லரசு (வயது 22). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சேலம் கருப்பூர் தேக்கம்பட்டி தொகுதி சேர்ந்தவன் சண்முகம் இவரது மகன் வல்லரசு (வயது 22). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். வேலைக்கு செல்லாமல் மது குடிக்கிறாயே என்று பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மன வேதனை அடைந்த வல்லரசு பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் நாசரின் செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்றார்.
    • ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சென்னை:

    விழுப்புரத்தை சேர்ந்த நாசர் இப்ராகிம் (46) என்பவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நின்றார். அப்போது ஒடிசாவை சேர்ந்த பாரத் நாயக் (24) என்ற வாலிபர் நாசரின் செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்றார்.

    அவரை சகபயணிகள் விரட்டி பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் ஒப்படைத்தனர். அப்போது பாக்கெட்டில் இருந்த பிளேடால் பாரத் கழுத்தில் கீறிக் கொண்டார். லேசான காயம் அடைந்த அவருக்கு முதலுதவி அளித்து விசாரித்தனர்.

    இந்த நிலையில் கழிவறை உள்ளே சென்ற பாரத், ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    • நதியா திடீரென மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சி சோலை புதூர் பகுதியை சேர்ந்தவர் நதியா (38).

    இவர் சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள தண்ணீர் பந்தலில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நதியா திடீரென மனம் உடைந்து எலி மருந்து (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணி சுமை காரணமாக தற்கொ லைக்கு முயன்றாரா? என தெரியவில்லை.

    இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×